திருச்சியில் நில அபகரிப்பு புகாரில் இந்திய ஜனநாயக கட்சியின் மாநில நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.கட்டப்பஞ்சாயத்து, நில அபகரிப்பு போன்ற செயல்களில் ஈடுபடுவோரை தடுக்கும் வகையில் "ஆப்ரேஷன் அகழி" என்ற பெயரில் 25 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.அதன் ஒரு பகுதியாக இந்திய ஜனநாயக கட்சியின் மாநில இளைஞரணி செயலாளரான மைக்கேல் சுரேஷ் என்கிற பட்டரை சுரேஷ் வீட்டிலிருந்து 66 அசல் பத்திரங்கள், 31 புதுச்சேரி மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டன.அவை கட்டப் பஞ்சாயத்து மற்றும் கந்து வட்டி மூலம் மிரட்டி வாங்கப்பட்ட பத்திரங்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது.இதையடுத்து தலைமறைவான பட்டறை சுரேஷ், புதுச்சேரியில் பதுங்கியிருந்த நிலையில் தனிப்படையினரால் கைது செய்யப்பட்டார்.