ரூட்டு தல பிரச்சனையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் தாக்கியதில் சிகிச்சை பெற்று வந்த மாநில கல்லூரி மாணவர் சுந்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த 4 ஆம் தேதி நடந்த இந்த தாக்குதலில் காயமடைந்த சுந்தர், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக சந்துரு, யுவராஜ், ஈஸ்வர், ஹரி பிரசாத், கமலேஸ்வரன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு அல்லிக்குளம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் வரும் 18 ஆம் தேதி நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் பேரில் 5 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.