நெல்லையில் இருந்து திருச்செந்தூர் சென்ற அரசு பேருந்தில் ஸ்ரீவைகுண்டத்திற்கு டிக்கெட் கேட்ட பயணியை நடத்துநர் தரக்குறைவாக பேசியதாகக் கூறி, பேருந்தை சிறைபிடித்த மக்கள் பின்னர் போலீசில் புகாரளித்தனர். அதன் பேரில் நடத்துநர் மீது வழக்கு பதிவு செய்து ஸ்ரீவைகுண்டம் போலீசார் விசாரித்து வருகின்றனர். பைபாஸ் ரைடர் தவிர மற்ற பேருந்துகள் ஸ்ரீவைகுண்டம் வந்து செல்லும் என அரசு போக்குவரத்து கழக நெல்லை மண்டல பொதுமேலாளர் உத்தரவிட்ட நிலையில், அனைத்து பேருந்துகளும் ஸ்ரீவைகுண்டம் வந்து செல்ல வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.