செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில், பைக்கில் வந்த பழனிச்சாமி என்ற இளைஞர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய அரசுப் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் தலைமறைவான நிலையில், பேருந்தை பறிமுதல் செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.