திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து, காரின் மீது மோதிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கரூர் மாவட்டம் பரமத்தி பொன்மலர் பாளையத்தை சேர்ந்த தர்மராஜ் என்பவர் தனது குடும்பத்தினருடன் பழனி முருகன் கோயிலுக்கு சென்றுவிட்டு காரில் வீடு திரும்பினார். அப்போது பிரேக் பிடிக்காததால் அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து ஆம்னி கார் மீது பலமாக மோதியது. இதில் காரில் பயணித்த 5 பேர் படுகாயமடைந்தனர்.