செங்கல்பட்டு மாவட்டம், பரனூர் சுங்கச்சாவடியில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசலில் ஊர்ந்து செல்கின்றன வாகனங்கள். செங்கல்பட்டு மாவட்டம், பரனூர் சுங்கச் சாவடியில், தீபாவளி திருநாள் மற்றும் வார விடுமுறை என்பதால் தென் மாவட்டங்களுக்கு அதிகமான வாகனங்கள் இன்று காலை முதல் படை எடுக்க தொடங்கி உள்ளன. செங்கல்பட்டு முதல் விழுப்புரம் வரை தேசிய நெடுஞ்சாலையில், சாலை விரிவாக்க பணி படாளம், மாமண்டூர் ஆகிய பகுதிகளில் இரண்டு மேம்பாலங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன. சென்னையில் இருந்து, விழுப்புரம், திண்டிவனம், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு இரு சக்கர வாகனம் மற்றும் கார்களில் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும் செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடியில் இருந்து சுமார் பாலாறு மேம்பாலம் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு இருக்கிறது. சுமார் மூன்று முதல் நான்கு கிலோ மீட்டர் வரை வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.