தொடர் மழை காரணமாக, கொடைக்கானல் நட்சத்திர ஏரி சாலை பகுதி, குளம் போல் காட்சியளிக்கிறது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கொடைக்கானல் மைய பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரி சாலையை சுற்றியும் குளம் போல் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். போதிய பராமரிப்பு இல்லாத காரணத்தால் இது போல் மழை நீர் வெளியே செல்ல முடியாமல் சாலையிலேயே தேங்கி இருப்பதால், இதனை சீரமைத்து உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.