சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கூடு கட்டியிருக்கும் தேனீக்களால் நோயாளிகளுக்கும், பார்வையாளர்களுக்கும் ஆபத்து காத்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. சென்னை ராயபுரம் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பல்வேறு இடங்களில் தேனீக்கள் கூடு கட்டி இருக்கின்றன. குறிப்பாக, மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவான 5-ஆவது மாடியில் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ள அறையின் மேல்புறம் தேனீக்கள் பெரிய அளவிலான தேன்கூடை கட்டியுள்ளன. இந்த வார்டின் கண்ணாடி ஜன்னல்கள் உடைந்துள்ள நிலையில், நோயாளிகளின் உறவினர்கள் ஆபத்தை உணராமல் படுத்திருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.