உங்களுடன் ஸ்டாலின் திட்டம் வரும் 15 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் சென்னையில் முதற் கட்டமாக ஆறு வார்டுகளில் வீடு வீடாக சென்று விண்ணப்பம் வழங்கும் பணி தொடங்கியது. சென்னை மாநகராட்சியில் ஆறு வார்டுகளில் விண்ணப்பங்களை தன்னார்வலர்கள், மாநகராட்சி ஊழியர்கள் வீடு வீடாக சென்று வழங்கினர். ஒவ்வொரு வார்டிலும் தலா இரண்டு முகாம்கள் என 15 ஆம் தேதி முதல் அக்டோபர் 31 ஆம் தேதி வரை 400 முகாம்கள் நடத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. மேலும் விண்ணப்பப் படிவத்தில் 13 அரசு துறைகள் வழியாக கிடைக்கும் 43 சேவைகள் குறித்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.