திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில், திமுக நிர்வாகிகள் இடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தால், மனு அளிக்க வந்த பொதுமக்களுக்கு சிரமம் ஏற்பட்டது. திமுக சார்பில் அமைச்சர் பெரியசாமி நியமித்த 10 பேர் கொண்ட பொறுப்புக் குழுவினரை, ஒன்றிய செயலாளர், பேரூராட்சி அதிகாரிகள் மற்றும் திமுகவினர் முறையாக அழைப்பதில்லை எனக் கூறி வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், மனு அளிக்க வந்த பொதுமக்கள் தங்களது மனுக்களை கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.