காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில், காவல்துறை தொடர்பான மனுக்களை பெறும் காவலர் நீண்ட நேரம் போனில் பேசி கொண்டிருந்தது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. முகாமில் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்று கடமையாற்றிய நிலையில், காவல்துறை சார்ந்த மனுக்கள் பெறும் இடத்தில் மட்டும் இருக்கைகள் காலியாக இருந்தது. அப்போது அங்கு பணியிலிருந்த காவலர் இசக்கி ராஜா தனது பைக்கில் போன் பேசியபடியே அமர்ந்து இருந்ததால் பொது மக்கள் யாரிடம் விண்ணப்பத்தை கொடுப்பது என குழம்பியபடி வீடு திரும்பினர்.