உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்கு 1 லட்சம் ரூபாய் வரை செலவு செய்தது குறித்து அதிமுக கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பியதால், அரக்கோணம் நகராட்சி அவசர நகர்மன்ற கூட்டத்தில் திமுக மற்றும் அதிமுக கவுன்சிலர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதுவரை நடைபெற்ற 17 முகாம்களுக்கு 17 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டதாக தீர்மானம் முன் வைக்கப்பட்டதால் அதிமுக கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினர்.