வைகை கரையோரம் தேங்கிய நீரை, அகற்றும் பணியில் போக்குவரத்து காவல் துறை தீவிரமாக செயல்படுகிறது. கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக, வைகை ஆற்றின் வடகரை மற்றும் தென்கரை பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து சென்றது. மதுரை கல்பாலம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் அதிக அளவு தேங்கியது. பாதுகாப்பு கருதி போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்த நிலையில், மதுரை நகர் பகுதிகளுக்குள் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில், காலை முதலே சுட்டெரிக்கும் வெயிலின் காரணமாக ஆங்காங்கே தண்ணீர் ஆற்றுக்குள் விடப்பட்டது. போக்குவரத்து காவல் துறையினர், ஜேசிபி இயந்திரம் கொண்டு தண்ணீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். தற்போது தடுப்புகள் அகற்றப்பட்டு போக்குவரத்து சீர் செய்யப்பட்டுள்ளது.