விழுப்புரம் மாவட்டம் கொணலூர் ஊராட்சியில் ஓராண்டிற்கும் மேலாக தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற ஊராட்சி மன்ற தலைவர் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் எழுந்துள்ளது. வடிகால்வாய் வசதி ஏற்படுத்தி தராமல் ஊராட்சி மன்ற தலைவர் குமார் மெத்தனம் காட்டுவதாக, பாதிக்கப்பட்ட பட்டியலின மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.