சென்னை பள்ளிக்கரணையில் குண்டும் குழியுமாக உள்ள சாலையில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குறிப்பாக வேளச்சேரி- பள்ளிக்கரணை சாலையில் தேங்கிய மழைநீரை மோட்டார் மூலம் வெளியேற்றாமல் ஆட்களை வைத்து கையால் அகற்றினர். இதனால் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், பணிக்கு செல்வோர் மற்றும் அத்தியாவசிய வேலைக்கு சென்றவர்கள் சிரமமடைந்தனர்.