கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழை காரணமாக, உழவு பணிகளை மேற்கொள்ள முடியாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மேலும் விவசாய நிலங்களில் மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளதால் பயிர்கள் சேதமடையும் நிலை உள்ளதாகவும் வேதனை தெரிவித்தனர்.