நெல்லை மாவட்டம் பணகுடி புனித சூசையப்பர் திருத்தல புதிய ஆலய அர்ச்சிப்பு விழா மற்றும் திருவிழாவுக்கான கொடியேற்றத்தில் மும்மதத்தினரும் பங்கேற்று வழிபாடு நடத்தினர். கடந்த 8 ஆண்டுகளாக ஆலயம் மறுசீரமைக்கப்பட்டு புதிய கலை வடிவத்துடன் கட்டப்பட்ட நிலையில், தூத்துக்குடி கத்தோலிக்க மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி ஜெபம் செய்து ஆலயத்தை திறந்து வைத்து, திருவிழாவுக்கான கொடியேற்றினார்.