மயிலாடுதுறை புனித அந்தோணியார் ஆலய ஆண்டுத் திருவிழா தேர்பவனி மற்றும் திருப்பலியில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர். மயிலாடுதுறை மறைவட்ட அதிபர் தார்சிஸ்ராஜ் அடிகள் சிறப்பு திருப்பலி நடத்தி, தேர்பவனியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, இன்னிசை முழங்க, வான வேடிக்கையுடன் மைக்கேல் சம்மனசு, ஆரோக்கியநாதர், செபஸ்தியார், ஆரோக்கியமாதா, பதுவை வனத்து அந்தோணியார் என 5 தேர்கள் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து மீண்டும் ஆலயத்தை அடைந்தது. வழிநெடுகிலும் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.இதையும் படியுங்கள் : காரைக்காலில் மலர் மற்றும் காய்கனி கண்காட்சி தொடக்கம்