சென்னையில் இரவு நேரத்தில் ரேபிடோ ஓட்டிய இளைஞரிடம் மிரட்டி 300 ரூபாய் பணத்தை GPAY மூலம் சிறப்பு உதவி ஆய்வாளர் தலைமையிலான போலீசார் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.சோதனையில் அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தும் பணத்தை கொடுத்தால் தான் வாகனத்தை விடுவோம் என மிரட்டியதோடு, திருட்டு வாகனமா? என போலீசார் அத்துமீறி நடந்து கொண்டதாக இளைஞர் வேதனை தெரிவித்துள்ளார்.