விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடிமரத்தில் புல் கட்டுகள் வைத்து கொடி பட்டம் சுற்றப்பட்டு கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்ற நிலையில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். வரும் 24 ஆம் தேதி கருட சேவையும், 26 ஆம் தேதி சயன சேவையும் நடைபெறும் எனவும், முக்கிய நிகழ்வான ஆடிப் பூர தேரோட்டம் வரும் 28 ஆம் தேதி நடைபெறும் எனவும் கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.