திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பங்குனி கோரதம் எனப்படும் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர். ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பங்குனி தேர் திருவிழா கடந்த 3 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நாள்தோறும் பெருமாள் கருடவாகனம், சேஷ வாகனம், கற்பகவிருட்ச வாகனங்களில் வீதி உலா வந்தார்.