காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் பேவர் பிளாக் தரை அமைக்கப்பட்டதில் பல லட்ச ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. ஊரக வளர்ச்சி துறை செயலர் அனுமதியின்றி ஊராட்சி ஒன்றிய பொது நிதியை பயன்படுத்த கூடாது என்ற அரசு உத்தரவை மீறி, ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பல லட்சம் மதிப்பீட்டில் அண்ணா சிலை சீரமைப்பு, புதிதாக கலைஞர் சிலை அமைப்பு, பேவர் பிளாக் தரை அமைப்பு, வர்ணம் தீட்டியது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது பேவர் பிளாக் தரை பள்ளம் விழுந்து மேடு பள்ளமாக காட்சியளிப்பதால், திமுக ஒன்றிய குழு தலைவர் கருணாநிதி தரமற்ற முறையில் பணிகளை முடித்து விட்டு நிதி முறை கேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது.இதையும் படியுங்கள் : மா விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுக ஆர்ப்பாட்டம்... சாலையில் மாங்காய்களை கொட்டி ஆர்ப்பாட்டம்