சேலம் அருகே சுமார் 70 ஆண்டுகள் பழமையான ஸ்ரீமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அயோத்தியாபட்டணம் கோட்டை முனியப்பன் கோவில் பகுதியில் விநாயகர், காளியம்மன், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் உடன் அமர்ந்து உள்ள மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கடந்த மூன்று நாட்களாக யாகசாலை பூஜைகள் நடைபெற்று காலை கோவிலில் விமான கோபுரத்திற்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.