திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே காளிபட்டி ஸ்ரீ உச்சி காளியம்மன் கோவில் விழாவில், சிறுவனுடன் கள்ளழகர் சிலையை வைத்து தண்ணீரை பீய்ச்சி அடித்து, மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்குவது போன்று காட்சிப்படுத்தப்பட்டது. மேலும் இவ்விழாவில் இளைஞர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக கலை நிகழ்ச்சிளும் நடைபெற்றன.