திருப்பரங்குன்றம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் மூலம் 72 லட்சத்து 39 ஆயிரத்து 338 ரூபாய் ரொக்கம், 245 கிராம் தங்கம், 3 கிலோ 760 கிராம் வெள்ளி காணிக்கையாக கிடைக்கப் பெற்றுள்ளது. கண்காணிப்பாளர் முன்னிலையில் நடைபெற்ற உண்டியல் எண்ணும் பணியில் பக்தர்கள் பேரவை உறுப்பினர்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள்,வங்கி ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் ஈடுபட்டனர்.