சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி ஸ்ரீ சண்முகநாதன் கோவில் யானை சுப்புலட்சுமி தீ விபத்தில் சிக்கிய நிலையில், கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.குன்றக்குடி ஆதினத்திற்கு சொந்தமான ஸ்ரீ சண்முகநாதன் கோவிலில் சுப்புலட்சுமி யானை பராமரிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், புதன்கிழமை இரவு மலை அடிவாரத்தில் கட்டி போட்டு இருந்த போது, யானைக்கு அமைக்கப்பட்டிருந்த நிழற்குடையில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது.இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்து யானையை மீட்டனர்.