புதுக்கோட்டை மாவட்டம் சேந்தங்குடி ஸ்ரீ மழை மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. மழை மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்யப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் வைத்து கோவிலை சுற்றி ஊர்வலமாக வலம் வந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.