சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் உள்ள ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் தெப்ப உற்சவ திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த கோயிலில் கடந்த ஒன்றாம் தேதி காப்புகட்டுதல் நிகழ்ச்சியுடன் சித்திரைத்திருவிழா தொடங்கியது. அதையடுத்து, சுவாமி திருக்கல்யாண உற்சவம், தேரோட்டம் உள்ளிட்டவை நடைபெற்றது. தொடர்ந்து முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தெப்ப உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் வலம் வந்த மீனாட்சி சுந்தரேசுவரரை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.