திருச்சி அருகே கொட்டம்பட்டில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் புதிய கட்டுமான பணியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். 33 கோடியே 29 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மொத்தம் 526 வீடுகள் கட்டப்படுகிறது. மொத்தம் 10 புள்ளி 167 ஏக்கரில் அனைத்து வசதிகளுடன் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் அமைகிறது.