மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில் உள்ள ஸ்ரீ காளியம்மன் கோவிலில் புரட்டாசி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பெண்கள் முளைப்பாரி எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. 500க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து கோவிலில் இருந்து ஊர்வலமாக சென்று வைகை ஆற்றில் கரைத்தனர்.