சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே திருக்கோஷ்டியூரில் அமைந்துள்ள ஸ்ரீசௌமிய நாராயணப் பெருமாள் திருக்கோவில் மாசி மக தெப்பம் மற்றும் தீபத் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. 108 வைணவத் தலங்களில் ஒன்றாக விளங்கிவரும் இந்த கோவிலில் கடந்த 5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி 10 வது நாளாக தெப்பம் மற்றும் தீபத் திருவிழா நடைபெற்றது. இதில் திரான பக்தர்கள் குவிந்து தீபங்களை ஏற்றி வைத்து சாமி தரிசனம் செய்தனர்