நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கோடமலை பகுதியில் உள்ள ஸ்ரீஅரங்கநாதர் கோயிலில் தேர் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இதில் படுகர் சமுதாய மக்கள் பாரம்பரிய உடை அணிந்து பங்கேற்றனர். பல்வேறு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளிய அரங்கநாதரை, பக்தர்கள் தோளில் சுமந்தபடி வலம் வந்து சாமி தரிசனம் செய்தனர்.