திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே எல்லம்பேட்டை ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் மற்றும் பெரியாயி அம்மன் கோவிலில், மயானக் கொள்ளை திருவிழா நடைபெற்றது. மயானக் கொள்ளையில் சூரைவிடுதல், வெள்ளாள கண்டி அழித்தல், தீச்சட்டி எடுத்தல், அலகு போடுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, அம்மனுக்கு படைக்கப்பட்ட காய்கறிகள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டன.