திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அரசு பள்ளியில் மாற்றுத்திறனாளி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விளையாட்டு போட்டியில், மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தினர். ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல் மற்றும் மூன்று சக்கர வாகன ரேஸ் உள்ளிட்ட போட்டிகளில் கலந்து கொண்டு அசத்தினர்.