நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அமில்மா நிறுவனத்தின் ஐஸ்கிரீம் கெட்டுப்போய் துர்நாற்றம் வீசுவதாக வாடிக்கையாளர் ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளார். கண்ணூரில் உள்ள கடையில் 10 ரூபாய் மதிப்புள்ள 3 அமில்மா ஐஸ்கிரீம்களை வாங்கியதாகவும், ஒன்றை சாப்பிட்ட குழந்தை வாந்தி எடுத்ததால், எஞ்சியவற்றை பார்த்தபோது அது கெட்டுப்போய் இருந்தது தெரியவந்ததாக புதுச்சத்திரம் பகுதியை சேர்ந்த குமரவேல் என்பவர் குற்றம்சாட்டியுள்ளார்.