மதுரை விமான நிலையத்தில் இருந்து துபாய் செல்லக்கூடிய ஸ்பைஸ் ஜெட் விமானம் தொழில் நுட்ப கோளாறு காரணமாக 14 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். விமானத்தில் உள்ள சக்கரத்தில் உள்ள ஒரு டயரில் காற்று மிக குறைவாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, தொழில்நுட்ப வல்லுநர்கள் அதனை சரி செய்தனர். இதனை தொடர்ந்து, காலதாமதம் காரணமாக 36 பயணிகள் பயணத்தை ரத்து செய்த நிலையில், 140 பயணிகளுடன் 14 மணி நேர தாமதத்திற்கு பிறகு மதுரை விமான நிலையத்தில் இருந்து ஸ்பைஸ் ஜெட் விமானம் துபாய் புறப்பட்டது.