சென்னை போரூரில் உள்ள ஸ்ரீ இராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான பேச்சு போட்டி நடைபெற்றது. இதில் 25 பள்ளிகளிலிருந்து 100 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட நிலையில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.