காரைக்காலில் கல்லறை திருநாளையொட்டி நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். கோட்டுச்சேரி, நெடுங்காடு, திருமலைராயன் பட்டினம் உள்ளிட்ட இடங்களில் முன்னோர்களின் கல்லறைகளை சுத்தம் செய்து மலர்களால் அலங்கரித்தும், மாலை அணிவித்தும் மெழுகுவர்த்தி ஏற்றியும் கிறிஸ்தவர்கள் அஞ்சலி செலுத்தினர்.