தீபாவளி நோன்பையொட்டி கும்பகோணம் நாககேஸ்வரசுவாமி கோவிலில் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் பெண்கள் வழிபாடு செய்தனர். குடும்பம் செழிக்கவும், சகலவிதமான ஐஸ்வரியங்கள் வேண்டியும் கேதார கௌரி விரதம் என்ற தீபாவளி நோன்பை மேற்கொண்ட பெண்கள் வாழைப்பழம், வெற்றிலைபாக்கு, மஞ்சள், நோன்பு கயிறு, பழங்கள், அதிரசம் உள்ளிட்டவற்றை அர்த்தநாரீஸ்வருக்கு வைத்து வழிபாடு செய்தனர்.