திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த கூழமந்தல் கிராமத்தில் காஞ்சிபுரம் வந்தவாசி நெடுஞ்சாலையில் முழு முதல் கடவுளாக போற்றப்படும் அருள்மிகு நட்சத்திர விருட்ச விநாயக பெருமானும் ஜென்ம நட்சத்திர வழிபாடுக்குறிய 27 நட்சத்திர அதிதேவதைகள், அத்தி லிங்கம், அருள்மிகு தாரை சமேத தேவகுரு பகவான், வள்ளி தேவ சமேத சிவசுப்ரமணியர், சனீஸ்வர பகவான், ராகு கேது, விருட்ச நாகத்தம்மன் உள்ளிட்ட தெய்வ திருமேனிகள் அருள்பாலிக்கும் திருக்கோயிலாகவும் அமைந்துள்ளது, இதை தவிற 27 நட்சத்திரம்,12 ராசி, 9 நவகிரகம் மற்றும் பஞ்ச பூத விருட்சங்கள் வளர்க்கப்பட்டு பக்தர்கள் வழிபாடுகளும் நடத்தப்பட்டு வருகின்றது. உலக மக்களின் நன்மையினை கருதியும், இல்லத்தில் சகல ஐஸ்வரியங்களும் பெருக வேண்டியும், மகா லட்சுமியின் பரிபூரண அருள் கிடைக்கவேண்டியும், மக்கள் அமைதியாக இன்புற்று வாழ வேண்டி மகாலட்சுமி பூஜை, 108 கோபூஜை மற்றும் அரசு வேம்பு திருக்கல்யாண வைபவம ஆகியவைகள் காலை 7.30 மணிக்கு மேல் அருள்மிகு நட்சத்திர விருட்ச விநாயகர், அத்தி லிங்கம், வள்ளி தேவ சேனா சமேத சிவசுப்பிரமணியா, 27 நட்சத்திர அதிதேவதைகள், ராகு கேது, சனீஸ்வரர், விருட்ச நாகாத்தம்மன் ஆகிய திருமேனிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் விநாயகர் மூஷிக வாகனத்திலும் வள்ளி தேவசேனா சமேத சிவசுப்ரமணியர் மயில் வாகனத்திலும், அம்பிகை பார்வதி சமேத சிவபெருமான் ரிஷப வாகனத்திலும் சுவாமிகள் புறப்பாடும், காலை 10.30 மணிக்கு மேல் 108 பசுக்கள் மற்றும் கன்றுகளை இடம்பெற செய்து மகாலட்சுமி பூஜை, 108 கோ பூஜை விழாவும், மகா தீப ஆராதனைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து அன்னதானமும், மாலை 04.00 மணிக்கு அரசு – வேம்பு சிவன் பார்வதி திருமண கோலத்தில் எழுந்தருளி திருக்கல்யாண வைபவமும் நடைபெற்றது.இதையும் படியுங்கள் : காணும் பொங்கலை முன்னிட்டு நடைபெற்ற சாமி உலா