கவரப்பேட்டை ரயில் விபத்தில் மீட்கப்பட்ட பயணிகள் சிறப்பு ரயில் மூலம் தர்பங்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே தர்பங்கா நோக்கி சென்ற அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த ரயிலில் பயணித்த 1,640 பேரும் மீட்கப்பட்டதையடுத்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அழைத்து வரப்பட்டனர். இதனையடுத்து தர்பங்காவுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு ரயில் 1,500 க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்டு சென்றது.