சென்னை வானகரம் சிஎஸ்ஐ கிறிஸ்துவநாதர் தேவாலயத்தில் ஈஸ்டர் பண்டிகை சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. சிஎஸ்ஐ கிறிஸ்துவநாதர் தேவாலய ஆயர் அருட்திரு ஆன்ட்ரு நேச குமார், ஜோன்ஸ் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்று ஆராதனை வழிபாடு செய்தனர். இதில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று சமூகத்தில் அமைதி வேண்டி சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர்.