காரைக்கால் அடுத்த திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் தை மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவருக்கு மஞ்சள், பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பூஜை பொருட்களை கொண்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் பக்தர்கள் பங்கேற்று காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.