திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகேயுள்ள பிரசித்தி பெற்ற சிறுவாபுரி முருகன் கோவிலில், சஷ்டி மற்றும் செவ்வாய் கிழமையை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் பக்தர் கூட்டம் அலை மோதியது. மேலும் திருமண தடை நீங்க வேண்டி வேப்ப மரத்திற்கு அருகில் தீபம் ஏற்றி ஏராளமான பக்தர்கள் தங்களுடைய நேர்த்தி கடனை நிறைவேற்றினர். மூலவர் பாலசுப்ரமணியர் ராஜ அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து முருகப்பெருமானை மனமுருகி வழிபட்டனர்.இதையும் படியுங்கள் : இருசக்கர வாகனமும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்து... இளைஞர் தூக்கி வீசப்பட்டதன் பதைபதைப்பூட்டும் சிசிடிவி காட்சி