விநாயகர் சதுர்த்தியையொட்டி, திருச்சி மலைக்கோட்டை விநாயகருக்கு 150 கிலோ எடையிலான கொழுக்கட்டை படையலிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மலைக்கோட்டை அடிவாரத்தில் உள்ள மாணிக்க விநாயகருக்கு 75 கிலோ எடையுள்ள கொழுக்கட்டை படையிலிட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து, மேளதாளங்கள் முழங்க 150 கிலோ எடையுள்ள கொழுக்கட்டையினை பக்தர்கள் தொட்டில் மூலம் சுமந்து சென்று உச்சிப்பிள்ளையாருக்கு படையலிட்டனர். இதனையடுத்து, நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் விநாயகரை தரிசித்தனர்.