ஆடி கடைசி வெள்ளியையொட்டி புதுக்கோட்டை திருக்கோகர்ணம் கோவில்பட்டி திரிசூல பிடாரி அம்மனுக்கு 9 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டது. ஆடி வெள்ளியில் அம்மனை வழிபட்டால் எல்லா வளங்களும் இல்லம் தேடி வரும் என்பது நம்பிக்கையில் திரிசூல பிடாரியம்மனுக்கு 9 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.