சென்னையில் வீட்டு மனைகளுக்கான கிரையப்பத்திரம் மற்றும் பட்டா பெறுவதற்காக 13 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெற இருப்பதாக, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. ((வரும் 24ஆம் தேதி)) இன்று துவங்கி மார்ச் 8ஆம் தேதி வரை, சட்டமன்ற தொகுதி வாரியாக தினசரி 2 முதல் 10 இடங்களில் காலை 10.30 முதல் மாலை 5 மணி வரை இந்த சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. முகாம் நடைபெறும் இடங்கள் மற்றும் அது தொடர்பான விவரங்களை tnuhdb.tn..gov.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். சென்னை பெருநகர வளர்ச்சி திட்டம் மற்றும் தமிழ்நாடு புறநகர் வளர்ச்சி திட்டம் மூலம் மனைகளுக்கான ஒதுக்கீடு பெற்றவர்கள் கிரையப்பத்திரம் பெறுவதற்காகவும், பட்டா பெறுவதற்காகவும் இந்த முகாம் நடைபெறுகிறது.