தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இன்று முதல் 4 நாட்களுக்கு 14 ஆயிரத்து 268 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதன்படி வழக்கமாக இயக்கப்படும் 2 ஆயிரத்து 92 பேருந்துகளுடன் கூடுதலாக 5 ஆயிரத்து 900 பேருந்துகள் என 4 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்து கழகம் ஏற்பாடு செய்துள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் கிளாம்பாக்கம், கோயம்பேடு மற்றும் மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட உள்ளன. தென் மாவட்டங்களுக்கு கிளாம்பாக்கத்தில் இருந்தும், வேலூர், திருப்பத்தூர், காஞ்சிபுரம், திருவாரூர், நாகை, புதுச்சேரி ஆகிய பகுதிகளுக்கு கோயம்பேட்டில் இருந்தும், ஆந்திராவுக்கு மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்தும் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.