காணும் பொங்கலை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள முருகப்பெருமானுக்கு 11 வகையான பழங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் திரளாக பங்கேற்று, சாமி தரிசனம் செய்தனர்.