தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திருநறையூரில் அமைந்துள்ள மங்கள சனீஸ்வரர் திருக்கோவிலில் சனிபகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. ஐப்பசி மாத மூன்றாவது சனிக்கிழமை ஒட்டி கோவிலில் அருள்பாலிக்கும் சனிபகவானுக்கு பல்வேறு வாசனை திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் வெள்ளி கவசத்தில் சிறப்பு மலர் அலங்காரத்தில் குடும்ப சமேதரராக காட்சி அளித்த சனி பகவானுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சனிபகவானை வழிபட்டனர்.